புதுக்கோட்டையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்வு.!புதுக்கோட்டையில் கொரோனா பாதிதவர்களின் எண்ணிக்கை 7 ஆக இருந்த நிலையில் தற்போது 12 ஆக உயர்ந்துள்ளது.


மகாராஷ்டிரா மாநிலத்தில்  இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பிய புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியைச் சேர்ந்த ஐந்து பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அவர்கள் புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 18ஆம் தேதி மும்பையிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 36 பேர் வந்த நிலையில் அதில் ஐந்து பேருக்கு தற்போது கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கனவே 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதில் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர்.

தற்போது ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மகாராஷ்டிராவில் இருந்து வந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் நாலு பேருக்கும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments