புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி.யிடம் அவசரமான புகார்களை தெரிவிக்க சிறப்பு ஏற்பாடு.!



கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டு உள்ள ஊரடங்கு உத்தரவினால் பொதுமக்கள் போலீஸ் டி.ஐ.ஜி., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டு உள்ளிட்ட உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து புகார் கொடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது.


இந்நிலையில் திருச்சி சரகத்திற்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் அவசரமான புகார்கள் தொடர்பாக திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணனை நேரில் சந்திக்க விரும்புபவர்கள் காணொலி செயலி (கூகுள் மீட்) மூலம் வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பகல் 12 மணி முதல் 1 மணி வரை புகார்கள் கூறலாம். 

எனவே, புகார் தெரிவிக்க விரும்புபவர்கள் திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலக தொலைபேசி எண் 0431-2333909 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் போன்ற விவரங்களை தெரிவிக்கும்படியும், இந்த புகார்கள் அந்தந்த உட்கோட்ட தனிப்பிரிவு பொறுப்பு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் மூலமாக சம்பந்தப்பட்ட புகார்தாரர்களுக்கு செல்போன் மூலம்தொடர்பு கொண்டு காணொலி கூட்டத்தில் பங்கு பெறுவதற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். 

வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சரக அலுவலகத்தை தொடர்பு கொள்பவர்களுக்கு திங்கட்கிழமையும், செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை சரக அலுவலகத்தை தொடர்பு கொள்பவர்களுக்கு வெள்ளிக்கிழமையும் அந்தந்த உட்கோட்டத்தில் மனுதாரருக்கு வசதியான இடத்தில் இருந்து இதற்கென்று தனியாக நியமிக்கப்பட்ட பொறுப்பு அதிகாரிகள் மூலமாக காணொலி வசதி ஏற்பாடு செய்யப்பட்டு அதன் மூலம் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments