புதுக்கோட்டையில் தொடக்கத்தில் இல்லாத கொரோனா ஒரு மாதத்திற்கு பிறகு தொடங்கியது. அதன் பிறகு படிப்படியாக 7 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது, அவர்களும் சிகிச்சை பெற்று, குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர்.
கடைசி நபர் வீட்டிற்கு செல்லும் நாளில் மும்பையில் இருந்து கறம்பக்குடி பகுதிக்கு வந்தவர்களை கறம்பக்குடி, காட்டாத்தி அரசு பள்ளிகளில் தங்க வைத்து சோதனை செய்தபோது, அதில் ஒரு வயது குழந்தை உள்பட 9 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒருவரை தஞ்சை மருத்துவமனைக்கும், மற்ற 8 பேரை புதுக்கோட்டை கரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ள டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மருத்துவமனைக்கும் அனுப்பி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று புதுக்கோட்டை நகரில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டல் வங்கி நகை மதிப்பீட்டாளர் மற்றும் அவரது மனைவிக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு மும்பை தொடர்பால் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல அண்டக்குளத்திற்கு மும்பையிலிருந்து வந்த ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டு, சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நகை மதிப்பீட்டாளர் வேலை செய்த வங்கி இன்று காலை முதல் திறக்கவில்லை. தொடர்ந்து நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன் ஆய்வு செய்து நகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்தனர். தொடக்கத்தில் டெல்லி தொடர்பால் ஒருவருக்கு தொடங்கிய கரோனா தொற்று அடுத்து சென்னை தொடர்பால் ஏற்பட்டது. தற்போது மும்பை தொடர்பால் ஏற்பட்டு வருகிறது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.