புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடக்கம்.!தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் விடைத்தாள்கள் திருத்தும் பணி நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற உள்ளது. இந்த மையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். 

ஆசிரியர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு விடைத்தாள்களை திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணியில் 1,200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். 

ஆசிரியர்கள் வந்து செல்ல வாகன போக்குவரத்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments