கள்ள நோட்டு கள்ளனைப் பிடித்த புதுக்கோட்டை போலீஸ்! ரூ.65 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: 6 பேர் கைது.!புதுக்கோட்டை அருகே  ரூ 65 லட்சம் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.


புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மூங்கித்தான்பட்டி டாஸ்மாக் மதுக்கடையில் கடந்த 16 ஆம் தேதி சிலர் கள்ள நோட்டுகளை கொடுத்து மது வாங்க முயற்சி செய்தனர். அப்போது சந்தேகம் அடைந்த கடை விற்பனையாளர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீஸார் நான்கு பேரை கைது செய்தனர். 

இதன் பின்னணியில் இருப்பவர்களை சுற்றி வளைத்துக் கைது செய்ய புதுக்கோட்டை எஸ்பி அருண் சக்திகுமார் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

தனிப்படையினரின் தீவிர விசாரணையில் நாகர்கோவிலைச் சேர்ந்த மணிகண்டன், சென்னையை சேர்ந்த சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


நாகர்கோயிலை சேர்ந்த மணிகண்டன் வீட்டில் இருந்து ரூ.65 லட்சத்து 40 ஆயிரம் கள்ள நோட்டுகள் மற்றும் ஒரு கம்ப்யூட்டர்,ஒரு மடிக் கணினி ஒரு பிரிண்டர் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை எஸ்பி அருண்சக்தி குமார் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை மூன்று நாட்களுக்குள் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments