புதுக்கோட்டையில் கொரோனா தொற்று பாதித்த 7 பேரில் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்: கலெக்டர் உமாமகேஸ்வரி.!புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்த 7 பேரில் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் என்று கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளனர்.


இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட  கலெக்டர் உமாமகேஸ்வரி, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது :-

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகத்தால் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்னையில் இருந்து வருகைபுரிந்த இலுப்பூர் தாலுகாவை சேர்ந்த 37 வயதுடைய நபர் மற்றும் விராலிமலை தாலுகாவை சேர்ந்த 32 வயதுடைய நபருக்கும் கொரோனா தொற்று  கண்டறியப்பட்டு புதுக்கோட்டை  பழைய அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்கள்.

இவர்கள் பூரண குணமடைந்ததை அடுத்து இன்றையதினம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்கள். குணமடைந்து வீடு திரும்பிய இந்த 2 நபர்களும் தங்களது வீடுகளில் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள்.

மேலும் மாவட்டத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 7 நபர்களில்  இதுவரை 6 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்கள். மாலத்தீவில் இருந்து வருகை புரிந்த குளத்தூர் தாலுகாவை சேர்ந்த 24 வயதுடைய 1 நபர் மட்டும் புதுக்கோட்டை  பழைய அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவ்வாறு மாவட்ட  கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments