முஸ்லிம் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்திய ஜீ நியூஸ் செய்தியாளர் மீது வழக்கு பதிவு!



முஸ்லிம் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் விவாதம் நடத்திய ஜீ நியூஸ் செய்தியாளர் சுதீர் சவுத்ரி மீது ஜாமீன் பெற முடியாத வகையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேரள மாநில வழக்கறிஞர் கவாஸ் அளித்த புகாரின் அடிப்படையில் சுதிர் சவுத்ரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்ற மார்ச் 11 ந்தேதி ஜீ நியூஸ் சேனைல் அவசியமில்லாமல் ஜிஹாத் என்ற சொல்லை அவதூறாக பயன்படுத்தி குறிப்பிட்ட மதத்தினரின் மனதை புண்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்தியதாக சுதீர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


கவாஸ் அளித்துள்ள புகாரில், சுதீர் ஒளிபரப்பிய நிகழ்ச்சி, மத பதட்டங்களை அதிகரிப்பதாகவும், வெவ்வேறு சமூகங்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்துவதற்கும் வகையில் அவர் பயன்படுத்திய ‘ஜிஹாத் குறித்த விளக்கப்படம்’ அமைந்தது. இதன் மூலம் நாட்டின் முஸ்லிம்களை சவுத்ரி குறிவைத்ததாக கவாஸ் குற்றம் சாட்டினார்.

மேலும் கவாஸ் அளித்துள புகாரில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சின் வழிகாட்ட்டுதல்கள், நடைமுறைகளை சுட்டிக்காட்டியுள்ள கவாஸ், அதில் வழிகாட்டுதல் 2 (ii) மதக் குழுக்களை இழிவுபடுத்தும் காட்சிகள் அல்லது சொற்களைப் பயன்படுத்துவதை அது எச்சரிக்கிறது அல்லது மதங்களுக்கிடையே பிளவுகளை ஊக்குவிக்கிறது. உள்ளிட்டவைகளை மேற்கோள் காட்டியுள்ளார்.

இதன்படி கோழிக்கோடு கசாபா காவல் நிலையத்தில் சதீர் சவுத்ரீ மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments