தப்லீக் ஜமாஅத் தலைவர் பேசியதாக வைரலான ஆடியோ போலியானது: விசாரணையில் தகவல்.!



கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பிறப்பித்த உத்தரவுகளை பின்பற்ற வேண்டாம் என்பதாக டெல்லி தப்லீக் ஜமாஅத் தலைவர் மவுலானா சாத் காந்தல்வி பேசியதாக வெளியான ஆடியோ போலியானது என விசாரணை முடிவு வெளியாகியுள்ளது.


கொரோனா ஊரடங்கிற்கு முன்பு டெல்லியில் கூடிய தப்லீக் ஜமாஅத் ஆலோசனை கூட்டம் பின்பு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டவுடன் கலைக்கப்பட்டது. எனினும் கொரோனாவை தப்லீக் ஜமாஅத்தினர் தான் பரப்பினர் என்ற பொய்யான குற்றச்சாட்டுகளை ஊடகங்கள் பரப்பின. மேலும் சமூக ஊடகங்களிலும் போலியான வீடியோக்கள், ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

இதற்கிடையே டெல்லி தப்லிக் ஜமாஅத் தலைவர் மவுலானா சாத் கந்தால்வி உட்பட 6 பேர் மீது டெல்லி காவல்துறை ஐபிசி 304- ன் கீழ் வழக்குப் பதிவு செய்தது.

மேலும் ஹஸ்ரத் நிஜாமுதீன் காவல் நிலைய அலுவலர் முகேஷ் வாலியா அளித்த புகாரின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. ஆடியோ கிளிப்களை வெளியிட்டதாக கூறப்படும் மார்க்கஸ் உறுப்பினர் ஒருவரின் மடிக்கணினி போலீசார் கைப்பற்றி விசாரித்துள்ளனர்.

அந்த மடிக்கணினியில் 350-க்கும் மேற்பட்ட ஆடியோ கிளிப்புகள் மூன்று தன்மையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மர்கஸ் மாநாட்டின் போது பதிவு செய்யப்பட்ட ஒரிஜினல் ஆடியோ; உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்ட ஆடியோ; தங்கள் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட ஆடியோ என மூன்று தன்மைகளில் இருந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இருப்பினும், இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான விசாரணை குழுவுக்கு, சமூக ஊடகங்களில் வைரலாக பரவிய (எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்ட) அந்த குறிப்பிட்ட ஆடியோ இதுவரை கிடைக்கவில்லை. மாறாக, பல்வேறு இடங்களில் மத நம்பிக்கை மற்றும் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து மவுலானா சாத் பேசிய ஆடியோ கிளிப்கள் ஒன்றாக திருத்தப்பட்டிருக்கலாம் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ள,” நீங்கள் சமூக விலகலை பின்பற்ற தேவையில்லை, ஏனெனில், அது நமது மதத்தில் எழுதப்படவில்லை”என்ற அந்த ஆடியோ கிளிப், உண்மையில், பல ஆடியோ கிளிப்களின் கலவை (கிட்டதட்ட 20) என்பதை விசாரணைக் குழு கண்டறிந்தது. சித்தரிக்கப்பட்ட ஆடியோ கிளிப் உட்பட அனைத்து கிளிப்புகளையும், தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments