புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் அரசு மானியத்தில் சூரிய சக்தி உலர்ப்பான்கள் பெற விண்ணப்பிக்கலாம்.!வேளாண்மை பொறியியல் துறை வாயிலாக வேளாண்மை எந்திரமயமாக்கல் திட்டம் மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் சூரிய சக்தியால் இயங்கும் உலர்ப்பான்கள் அரசு மானிய உதவியுடன் புதுக்கோட்டை கோட்டத்திற்கு 3 எண்ணிக்கையில் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்க ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


சூரிய சக்தியால் இயங்கும் உலர்ப்பான்கள் சுமார் 400 சதுர அடி முதல் 1,000 சதுர அடி வரை 50 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை அரசு மானிய உதவியுடன் அமைக்கப்பட உள்ளது. 

சிறு, குறு, பெண் மற்றும் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 60 சதவீதம் அல்லது ரூ.3½ லட்சம் அதிகபட்ச மானியம், இதர விவசாயிகளுக்கு 50 சதவீதம் அல்லது ரூ.3 லட்சம் அதிகபட்ச மானியம் வழங்கப்படுகிறது. புதுக்கோட்டை, விராலிமலை, அன்னவாசல், குன்றாண்டார்கோவில், கறம்பக்குடி, கந்தர்வகோட்டை, திருவரங்குளம் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த விவசாயிகள் புதுக்கோட்டை, திருக்கோகர்ணத்தில் இயங்கும் உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்திலும், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, அரிமளம், திருமயம், பொன்னமராவதி ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த விவசாயிகள் அறந்தாங்கி ராஜேந்திரபுரத்தில் உள்ள வேளாண் பொறியியல்துறை உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்திலும் பதிவு செய்து சூரிய மின் சக்தி உலர்ப்பான்கள் அமைத்து பயன்பெறலாம். 

இந்த தகவலை கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments