இஸ்லாம்தான் என் உயிர் – மனம் மாறிய பிரபல நடிகை விமர்சகர்களுக்கு வலுவான பதில்!சினிமா பிடிக்கவில்லை என்று விலகியும் ஏன் தொந்தரவு செய்கிறீர்கள் ? என்று முன்னாள் நடிகை சாய்ரா வசீம் கேள்வி எழுப்பியுள்ளார்.


அமீர்கானின் தங்கல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான காஷ்மீரை சார்ந்த ஜாஹிரா வசீம் கடந்த ஆண்டு வெளியான ‘The Sky is Pink ‘ என்ற திரைப்படத்தோடு தனது திரை வாழ்க்கைக்கு குட்பை சொன்னார்.

19 வயதே ஆன ஜாஹிரா வசீம் அவ்வளவு சீக்கிரமாக திரைப்படத்தை விட்டு விலகுவது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பல்வேறு ஆதரவு, எதிர் விமர்சனங்களையும் அவர் சந்தித்தார். எனினும் அவரது முடிவு மிகவும் உறுதியானதாக இருந்தது.

திரைபடங்களிலிருந்து விலகுவதற்காக அவர் கூறிய காரணம், ” முஸ்லிமாக பிறந்த போதும் இஸ்லாம் குறித்த அறியாமையால் விவரம் இல்லாமல் சினிமா துறையை தேர்ந்தெடுத்தேன். ஆனால் பின்புதான் தெரிந்தது இஸ்லாம் எப்பேற்பட்ட மதம் , அதுதான் என் உயிர். அதில் முழுமையாக வழிபாடுகளில் ஈடுபட வேண்டும் இதன் நோக்கத்தில் திரைத்துறையை விட்டு விலகுகிறேன்” என்று அறிவித்தார்.

அவர் திரைத்துறையை விட்டு விலகி ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில், சமூக வலைதளங்களில் அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறைந்தபாடில்லை. இதற்கு பதிலளிக்கும் விதமாக சனிக்கிழமை அன்று இன்ஸ்டாகிராமில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அதில்,” ஒருவரின் வாழ்க்கையில் நீங்கள்தான் முக்கியமானவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் ஒருவரை முட்டாள்தனமாக விமர்சிக்கும்போது அவர்களின் மனநிலையை நீங்கள் உணருவதில்லை. ஒருவரின் தோல்விக்கும் வெற்றிக்கும் நீங்கள் தான் காரணம். நீங்கள் வைக்கும் நகைச்சுவையான கருத்துக்களோ அல்லது கடுமையான கருத்துக்களோ எல்லோராலும் ஏற்றுக் கொள்ள முடியும் என நம்புகிறீர்களா? சிலர் கடுமையானவர்கள், சிலர் மென்மையானவர்கள். எல்லோராலும் கடுமையான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments