தமிழகத்தில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி: முக கவசம் கட்டாயம்.!



சென்னை மாநகராட்சி காவல் எல்லையை தவிர, தமிழகத்தில் இன்று(சனிக்கிழமை) முதல் ஒரு பயணியுடன் ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷா ஓட்ட அரசு அனுமதி அளித்துள்ளது. முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், சானிடைசர் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தற்போது, சென்னை மாநகராட்சி காவல் எல்லையைத் தவிர தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷா ஆகிய வாகனங்களை ஓட்டுனர் மற்றும் ஒரு பயணி மட்டும் பயணிக்கும் வகையில், 23-ந்தி(இன்று) முதல் (தினமும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும்) இயக்க அனுமதிக்கப்படுகிறது.

நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷா ஆகியவற்றை இயக்க அனுமதி இல்லை. அப்பகுதிகளில் வாழும் ஆட்டோ, ரிக்‌ஷா ஓட்டுனர்களுக்கும் இவ்வாகனங்களை ஓட்ட அனுமதி இல்லை.

பயணிகள் பயன்படுத்தும் வகையில் வாகனங்களில் சானிடைசர்களை ஓட்டுனர்கள் வைத்திருக்க வேண்டும். ஓட்டுனர்களும், பயணியர்களும் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும், ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷா ஆகியவற்றை தினமும் 3 முறை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். ஓட்டுனர்கள் அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவியும், வாகனத்தில் சுகாதாரத்தையும் பேண வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, பொதுமக்கள் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments