அறந்தாங்கியில் வாய் பேச முடியாத தம்பியை ஏன் எரித்துக் கொன்றேன்? வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்.!அறந்தாங்கியில் வாய் பேச முடியாத தம்பியை எரித்துக்கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள அரசர்குளம் வட பாதியை சேர்ந்தவர் வரத ராஜன். இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு சண்முகசுந்தரம் (வயது 29), கலையரசன்(28), இளவரசன்(27) ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

இதில் கலையரசன் வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி ஆவார். மேலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 3-வது மகனான இளவரசன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இளவரசனுக்கு அறந்தாங்கி அருகே ஆயிங்குடியில் திருமணம் செய்ய பெண் பார்த்து உள்ளனர்.

இதனால் கலையரசன் எனக்கு திருமணம் செய்ய வேண்டும் என குடும்பத்தில் பிரச்சினை செய்ததாக தெரிகிறது. இதனால் அவரது அண்ணன் சண்முகசுந்தரம் பயமுறுத்துவதற்காக கலையரசன் உடல் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துவிடுவேன் என கூறி, தீக்குச்சியை பற்ற வைத்துள்ளார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக கலையரசன் உடல் மீது தீப்பற்றி கொண்டது. இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நாகுடி சப்-இன்ஸ்பெக்டர் நவீன்குமார் கொலை வழக்குப் பதிவு செய்து சண்முகசுந்தரத்தை கைது செய்தார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments