இந்து முதியவருக்கு இறுதி சடங்கு செய்த இஸ்லாமியர்கள்.!உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 55 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர்.


இந்தியாவில் 4000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 1,00,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. 

உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் இந்த கொரோனா ருத்ர தாண்டவம் ஆடி வருகின்றது. தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத காரணத்தால் அதிகப்படியான உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக மரணமடைந்த தனது தந்தைக்கு அவருடைய மகன் இறுதி சடங்கு செய்ய மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 78 வயது முதியவர் ஒருவர் நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த தகவலை நாக்பூரில் இருந்த அவரின் மகனிடம் தெரிவித்துள்ளார்கள். ஆனால் கொரோனா அச்சம் காரணமாக அவரின் உடலை பெற அவருடைய மகன் மறுத்துவிட்டார். இந்த தகவலை அறிந்த குச்சி மேமன் ஜமா அத் முஸ்லிம் அமைப்பினர் உடலை பெற்று இறுதி சடங்கு செய்தனர். இறந்தவர் இந்து என்பதால் அவருக்கு இந்து முறைப்படி இறுதி சடங்கு செய்யப்பட்டது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments