முஸ்லிம்களின் தொழுகைக்காக திறக்கப்பட்ட தேவாலயம் – கொரோனாவால் நிகழ்ந்த அதிசயம்.!ஜெர்மனியில் சமூக விலகலுடன் தொழுகை நடத்த அரசு அனுமதித்துள்ள நிலையில் கிறிஸ்தவ தேவாலயத்திலும் முஸ்லிம்கள் தொழுகை நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸால் பெரும்பாலான நாடுகளில் தேவாலயங்கள், மசூதிகள், கோவில்கள் என அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஜெர்மனியில் சமூக விலகல் விதிமுறைகளின்படி தேவாலயங்கள், மசூதிகளை திறந்து வழிபாடு நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இது இப்படியிருக்க ஜெர்மனியின் பெர்லின் நியோகோலின் மாவட்டத்தில் உள்ள தார் அல் சலாம் மசூதியில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை நடந்தபோது முஸ்லிம்கள் அதிகம் வருவார்கள் என்பதாலும், அங்கு 50 பேரால் மட்டுமே தொழ முடியும் என்பதாலும், அருகில் உள்ள மார்த்தா லுதாரன் தேவாலயம் (Martha Lutheran church) முஸ்லிம்களின் தொழுகைக்காக திறக்கப்பட்டது. அங்கு சமூக இடைவெளியுடன் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தப்பட்டது.

இந்நிகழ்வு மத ஒற்றுமைக்கும், மனித நேயத்திற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments