மணமேல்குடி அருகே குடிபோதையில் கணவர் தகராறு; மதுக்கடை முன் மனைவி தற்கொலை முயற்சி.!குடிபோதையில் கணவர் தகராறில் ஈடுபட்டதால் மனைவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.


மணமேல்குடி அடுத்த தட்டான்வயல் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 40), மதுகுடிக்கும் பழக்கம் உடையவர். இவரது மனைவி வாசுகி. நீண்டநாட்களாக மூடப்பட்டு இருந்த மதுக்கடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டதைதொடர்ந்து தமிழ்செல்வன் மதுகுடித்துவிட்டு வந்து வாசுகியிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கினாராம்.

இதனால் மனம் உடைந்த வாசுகி, இவ்வளவு நாட்களாக மதுக்கடை இல்லாமல் எனது கணவர் எந்த சண்டையும் போடாமல் இருந்தார். இதனால் என் குழந்தைகளுடன் சந்தோஷமாக இருந்தேன். தற்போது மதுக்கடை திறந்ததும் குடித்துவிட்டு வந்து சண்டை போட்டார். எனவே மதுக்கடையை அடைக்கவேண்டும் என கூறி திருவாப்பாடி மதுக்கடைக்கு முன்பு மண்எண்ணெய் கேனுடன் வந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். 

உடனே அக்கம்பக்கத்தினர் அவரை தடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments