சவூதி அரேபியாவில் பிறை தென்படாததால் ஞாயிற்றுக்கிழமை ஈத் அல் பித்ர் என அறிவிப்பு..!!சவூதி அரேபியாவில் ஷவ்வால் மாதத்திற்கான பிறை இன்று தென்படாததால், இந்த வருட ரமலான் மாதம் 30 நாட்களாக இருக்கும் என்றும், வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 24,2020) ஷவ்வால் மாதம் 1 ம் தேதி ஈத் அல் பித்ர் என்றும் சவூதி அரேபியாவின் பிறை பார்க்கும் கமிட்டி அறிவித்துள்ளது.

இதே போன்று மலேசியா, இந்தோனேசியா, துருக்கி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் ஈத் அல் பித்ர் ஞாயிற்றுக்கிழமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈத் அல் பித்ர் விடுமுறை நாட்களில் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கவும், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் ஐக்கிய அரபு அமீரக அரசு பொது மக்களை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், பெருநாள் தொழுகையை அனைவரும் வீட்டிலேயே தொழுது கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments