கீழமஞ்சக்குடி ஊராட்சியில் அனுமதியின்றி அமைத்த குடிநீர் குழாய் இணைப்பை துண்டித்து அதிரடியாக நடவடிக்கை எடுத்த ஊராட்சி நிர்வாகம்.!மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம் கீழமஞ்சக்குடி ஊராட்சியில் சட்டவிரோதமாக வீடுளில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய்களை ஊராட்சி நிர்வாகம் அதிரடியாக அகற்றியது.

மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம் கீழமஞ்சக்குடி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில்தான் ஜெகதாபட்டினம் மீன்பிடி இறங்கு தளம் உள்ளது. கீழமஞ்சக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் எந்தவித அனுமதியும் பெறாமல் குடிநீர் குழாய்களை அமைத்திருந்தனர்.

இவ்வாறு சட்டவிரோதமாக குழாய்களை அமைத்து, குடிநீரை எடுத்ததால் ஒரு சில பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாமல் இருந்தது. | இதுகுறித்து கீழமஞ்சக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் மும்தாஜ் பேகத்திற்கு தகவல் வந்தது. 

இதன் பேரில் அவர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்களுடன் இணைந்து சுமார் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய் இணைப்புகளை அகற்றினார். சட்டவிரோத குடிநீர் குழாய் இணைப்புகள் அகற்றிய கீழமஞ்சக்குடி ஊராட்சி தலைவர் மும்தாஜ் பேகம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments