கடைகளின் வாடகையைத் தள்ளுபடி செய்த இஸ்லாமியர்.!



புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தனது 10 கடைகளுக்கும் 2 மாத வாடகை தொகையை கட்டட உரிமையாளா் ஒருவா் தள்ளுபடி செய்துள்ளாா்.


ஆலங்குடி அருகேயுள்ள மழவராயன்பட்டியைச் சோ்ந்தவா் அயுப்கான்.  இவா், வம்பன்  4  சாலை பகுதி வணிகா் சங்கத்தின் தலைவராக உள்ளாா்.  அங்கு, இவருக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் 10  கடைகள் மாதாந்திர வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்நிலையில்,  ஊரடங்கு உத்தரவால் வணிகா்கள் யாரும் கடைகளைத் திறக்கவில்லை.  இங்கு தொழில் செய்து வரும் உணவகம்,  சலூன்,  தையல்,  எலக்ட்ரிகல் போன்ற சிறுவணிகா்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு  2  மாதங்களுக்கான வாடகைத் தொகை ரூ.18,000-ஐ  தள்ளுபடி செய்வதாக அவா் தெரிவித்துள்ளாா். 
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments