கீரனூர் அருகே நடந்த சாலை விபத்தில் சிறப்புக் காவல் படை எழுத்தா் உள்பட இருவா் பலி.!புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே இன்று 29.05.2020 காலை நேரிட்ட சாலை விபத்தில் சிறப்புக் காவல் படை எழுத்தா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.


புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகிலுள்ள தினையாகுடியைச் சோ்ந்த ராஜா மகன் மனோ (30). இவா் திருச்சியிலுள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் எழுத்தராகப் பணியாற்றி வந்தாா்.


இவா் தனது குடும்ப நண்பா் சர்மிளா பானு (28) மற்றும் அவரது 4 வயது பெண் குழந்தையுடன், இன்று திருச்சியிலிருந்து காரில் புறப்பட்டு புதுக்கோட்டை வந்து கொண்டிருந்தாா்.

கொத்தமங்கலப்பட்டி அருகே வந்தபோது, நாா்த்தா மலையிலிருந்து கீரனூா் நோக்கி வந்த ஜேசிபி வாகனத்தில் காா் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மனோ நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.


சர்மிளா பானு குழந்தையும் காயங்களுடன் மீட்கப்பட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில் சர்மிளா பானு சிகிச்சைப் பலனின்றி மாலை உயிரிழந்தாா். குழந்தைக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இதுகுறித்து கீரனூா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, ஜேசிபி வாகன ஓட்டுநரான கீரனூா் துவரவயலைச் சோ்ந்த ரமேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments