மேற்குவங்கத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும்.! மம்தா அதிரடி!கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஜூன் ஒன்றாம் தேதி வரை பொதுமுடக்கம் அமலில் உள்ளது. மேலும் மத்திய அரசு, ஊரடங்கு காரணமாக  நாடு முழுவதும் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவித்திருந்தது.


இந்நிலையில் மேற்கு வங்கத்தில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

அதேபோல் ஜூன் 8-ம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 10 சதவீத ஊழியர்களுடன் செயல்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வழிபாட்டு தலங்களில் ஒரு நேரத்தில் 10 பேருக்கு மேல் அனுமதி இல்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments