தனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பாற்றிய டாக்டர் ஜாஹித்.!



நோன்பு திறக்கும் நேரம் டாக்டர் ஜாஹித் நோன்பு திறப்பதற்காக அமர்ந்து பிரர்த்தனையில் இருந்தார் அப்போது அவருக்கு அவசர அழைப்பு வந்தது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு மருத்துவராக பணிபுரிபவர் டாக்டர் ஜாஹித். கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நோயாளியை ஆம்புலன்சிலிருந்து அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்ற வேண்டும். அதற்கு ஜாஹிதின் உதவி தேவை. அதற்கான அழைப்புதான் அபோது ஜாஹிதுக்கு வந்தது.

உடனே அங்கிருந்து நகர்ந்த ஜாஹித், நோயாளி இருந்த ஆம்புலன்சிற்கு சென்றார். அங்கு நோயாளிக்கு சரிவர வெண்டிலேட்டர் மாட்டப்படாமல் மூச்சுத்திணறிக் கொண்டு இருந்ததை உணர்ந்தார்.  கிட்டத்தட்ட மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்தார் நோயாளி.

அப்போது டாக்டர் ஜாஹிதுக்கு கொரோனா நோயாளிகளை கவனிக்கும் மருத்துவர்கள் அணியும் பாதுகாப்பு உடைகளை அணிந்திருந்தார். ஆனால் அவர் அணிந்திருந்த முகக்கவசம் நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்படுத்தவே டாக்டர் ஜாஹிதின் பாதுகாப்பு குறித்து கவலைப் படமால் தனது முகக்கவசத்தை நீக்கிவிட்டு நோயாளிக்கு சிகிச்சை அளித்தார். இதனால் டாக்டர் ஜாஹிதுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளபோதும் அதனைப் பற்றி கவலைப்படவில்லை, நோயாளியின் உயிர் மிக முக்கியம் என்பதை ஜாஹித் அப்போது உண்ர்ந்திருந்தார்.

டாக்டர் ஜாஹிதின் செயலால் கொரொனா நோயாளி இறுதிக் கட்டத்திலிருந்து காப்பாற்றப்பட்டார். தற்போது டாக்டர் ஜாஹித் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த நெகிழ்வான தருணத்தை எய்ம்ஸ் டாக்டர் ஹர்ஜித் சிங் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments