கத்தாரில் வெளியே செல்லும் போது EHTERAZ (App) ஸ்மார்ட் போனில் கட்டாயம்.! கத்தார் அரசு உத்தரவு.!கத்தார் அமைச்சரவையின் முடிவின் படி கத்தாரிலுள்ள அனைவரும் தங்களது ஸ்மார்ட் போன்களில் EHTERAZ செயலியை install செய்வது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவிட்-19 க்கு எதிரான கத்தார் போராட்டத்தின் ஒரு பகுதியாக உள்துறை அமைச்சகத்தால் (MoI) தொடங்கப்பட்ட EHTERAZ பயன்பாடு பயனர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளது.  IOS மற்றும் Android பதிப்புகளில் கிடைக்கிறது.

இந்த நடைமுறையானது இன்று முதல் (மே22) மறு அறிவித்தல் வரை அவசியம் பின்பற்றப்பட வேண்டும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று மே 22 முதல் வீட்டை விட்டு வெளியேறும் போது தங்களது கைப்பேசிகளில் EHTERAZ செயலி கட்டாயம் நிறுவப்பட்டிருத்தல் வேண்டும்.
அவ்வாறு நிறுவப்படாமல் இருந்தால் அது தொற்று நோய் சட்ட மீறலாக கருதப்படும். இவ்வாறு மீறுபவர்கள் கத்தாரின் தொற்று நோய் சட்டத்தின் படி 3 வருட சிறை தண்டனை மற்றும் 2 இலட்சம் ரியால்கள் வரை அபராதம் அல்லது மேற்படி தண்டனைகளில் இரண்டில் ஒன்றுக்கு ஆளாக வேண்டி வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments