புதுக்கோட்டை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் 100 ரூபாய் அபராதம்.! மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.!



தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.


பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நேற்று (17.06.2020) மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்து அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்டம் முழுவதும் பொது இடங்களிலும், பொதுப்போக்குவரத்து பயன்பாட்டின்போதும் பயணிகள் வரும்பொழுதும் பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 

இனி வரும் நாட்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் வந்தால் அவர்களுக்கு ரூ.100 அபாரதம் விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறுமுறை இதே தவறை செய்யும் நபர்களின் மீது பொதுசுகாதார சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்ட எல்லைகளில் இதுவரை 10 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்ததது. 

தற்பொழுது 3 சோதனை சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டு மொத்தம் 13 சோதனை சாவடிகளில் பயணிகள் வருகை கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் முறையாக இ-பாஸ் அனுமதியில்லாமல் வரக்கூடிய நபர்கள் மற்றும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சென்னையிலிருந்து திருச்சி வழியாக வரும் நபர்களுக்கும் ஒவ்வொரு சோதனை சாவடிகளிலும் துணை கலெக்டர் நிலையில் அலுவலர் வாகன தணிக்கையினை தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.வி.அருண்சக்திகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.காளிதாசன், ஊரக நலப்பணிகள் இணைஇயக்குநர் (பொ) மரு.மலர்விழி, பொதுசுகாதார துணை இயக்குநர்கள் மரு.அர்ஜுன்குமார், மரு.கலைவாணி, நகராட்சி ஆணையர் ஜீவாசுப்பிரமணியன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments