தமிழ்நாட்டில் 10,11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து; அனைவரும் தேர்ச்சி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.!



தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு மற்றும் 11ம் வகுப்பு தேர்வு ரத்து, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு.


பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

அதில் தமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்தது. இதனோடு 11-ம் வகுப்புக்கு விடுபட்ட பாடங்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட இருந்தன.

ஆனால், தமிழகத்தில்  கொரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், மாணவ, மாணவிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்புக்கு விடுபட்ட பாடத்திற்க்கான தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மாணவ, மாணவிகள், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் எடுத்த மதிப்பெண்களை கணக்கில் எடுத்து 80% மதிப்பெண்ணும், பள்ளி வருகையை கணக்கில் எடுத்து 20% மதிப்பெண்ண் வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.

நிலுவையில் உள்ள 12-ம் வகுப்புத்  தேர்வு குறித்து விரைவில் முடிவெடுத்து அறிவிக்கப்படும். சூழலைப் பொறுத்து 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுத முடியாத மாணவ, மாணவிகளுக்கு மறு தேதி அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments