புதுக்கோட்டையில் ஒரே நாளில் கர்ப்பிணி உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!புதுக்கோட்டையில் கொரோனா பாதித்தவர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டதில் 10 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. 


இதில் புதுக்கோட்டை கடையப்பட்டியை சேர்ந்த 35 வயது பெண், மேற்பனைக்காட்டை சேர்ந்த 23 வயது வாலிபர், அவரது 20 வயதுடைய சகோதரர், திருமயத்தை சேர்ந்த 47 வயது ஆண், 28 வயது இளம்பெண், கறம்பக்குடியை சேர்ந்த 50 வயது பெண், அன்புகோவிலை சேர்ந்த 22 வயது இளம்பெண், 20 வயதுடைய அவரது சகோதரி, புதுக்கோட்டை பழனியப்பா பஸ் நிறுத்த பகுதியை சேர்ந்த 32 வயது பெண், மேலூரை சேர்ந்த 12 வயது சிறுவன் ஆகியோர் ஆவர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தொற்று உறுதியான நபர்கள் சென்னையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் பழனியப்பா பஸ் நிறுத்தத்தை சேர்ந்த 32 வயது பெண் கர்ப்பிணி என அதிகாரிகள் கூறினர். 

மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக நேற்று முன்தினம் இருந்தது. இந்த நிலையில் நேற்று 10 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments