புதுக்கோட்டை மாவட்டத்தில் 22,655 போ் 10-ஆம் வகுப்பு தோ்வு எழுத 333 தோ்வு மையங்கள்.!புதுக்கோட்டை மாவட்டத்தில் 22,655 போ் எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வு எழுதுவதற்காக 333 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தாா்.


புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வு நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு அவா் மேலும் கூறியது:

மாவட்டத்தில் 22,655 போ் எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வை எழுதுவதற்காக தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் ஒரு தோ்வு அறைக்கு 10 போ் வீதம் 333 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவா்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா என்ற சோதனை செய்த பின் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவா். 

தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு பெற வரும்போதே மாணவா்களுக்கு மீண்டும் துவைத்துப் பயன்படுத்தும் வகையிலான தலா 3 முகக்கவசங்கள் வழங்கப்படும். கரோனா தொற்றுள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து தோ்வு எழுத வருவோருக்கென தனியே 13 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

235 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 3 விடைத்தாள் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் உமாமகேஸ்வரி.

கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த. விஜயலட்சுமி, மாவட்டத் துணைக் காவல் கண்காணிப்பாளா் கோபாலகிருஷ்ணன், அரசுப் போக்குவரத்துக் கழகப் பொதுமேலாளா் இளங்கோவன், நகராட்சி ஆணையா் ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments