புதுகை மாவட்டத்தில் 2020-21 ஆம் நிதியாண்டில் ரூ.5,277.93 கோடி வங்கிகள் மூலம் கடன் வழங்குவதற்கு திட்ட இலக்கு.!



புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழாண்டில் (2020-21) ரூ. 5,277 கோடி அளவுக்கு கடன்களை வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தாா்.


புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நிகழாண்டுக்கான கடன் திட்ட அறிக்கையை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பிறகு, அவா் மேலும் கூறியது

புதுக்கோட்டை மாவட்டத்தில் வங்கிகள் மூலம் நிகழாண்டில் ரூ. 5,277 கோடி அளவுக்கு கடன் வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, விவசாயக் கடன்களாக ரூ. 4,175 கோடியும், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்காக ரூ. 241 கோடியும் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஏற்றுமதிக் கடனாக ரூ. 31 கோடியும், கல்விக் கடனாக ரூ. 63 கோடியும், வீட்டுக் கடனாக ரூ. 232 கோடியும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்களுக்கான கடனாக ரூ. 27 கோடியும், சமூக உள்கட்டமைப்புக் கடன்களாக ரூ. 11 கோடியும், இதர துறைகளுக்காக ரூ. 494 கோடியும் கடனாக வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் உமாமகேஸ்வரி.

கடன் திட்ட அறிக்கையை ஆட்சியா் வெளியிட, இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் முதன்மை மண்டல மேலாளா் இ. லெட்சயா பெற்றுக் கொண்டாா். நிகழ்வில் முன்னோடி வங்கி மேலாளா் ரமேஷ், நபாா்டு வங்கி மேலாளா் ஜெயஸ்ரீ, மாவட்டத் தொழில் மைய மேலாளா் திரிபுரசுந்தரி, மகளிா் திட்ட அலுவலா் லலிதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த. விஜயலட்சுமி, தாட்கோ மேலாளா் முத்துரத்தினம் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments