திருச்சியில் கொரோனோவுக்கு முதல் மரணம்.!



திருச்சியில் கரோனோவுக்கு முதல் பலியான சம்பவம் அம்மாவட்ட மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


கரோனோ வைரஸ் தொற்று ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டில் 88 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 71 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

ஏற்கனவே சிவப்புப் பகுதியில் இருந்த திருச்சி கொஞ்சம் கொஞ்சமாக ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறியது. ஆனால் அடுத்த சில நாட்களிலே கரோனோ தொற்று அதிகமாகி தற்போது மீண்டும் சிவப்பு மண்டலத்திற்குச் சென்று விடுமே என்கிற பயம் திருச்சி மக்களிடம் ஏற்பட்டுள்ளது. 

தற்போது திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேரும் பிற மாவட்டத்தைச் சேர்ந்த 9 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிற வைரஸ் காய்ச்சல் அறிகுறியுடன் 380 பேர் வரை சிகிச்சை பெற்று குணமடைந்து சென்று உள்ளனர். 

இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி காய்ச்சல் அறிகுறியுடன் ஆழ்வார் தோப்பைச் சேர்ந்த 70 வயது முதியவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோனோ தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் திடீர் என அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். திருச்சியில் கரோனோ தொற்று ஏற்பட்டு பலியான முதல் நபர் இவர் ஆவர். 

கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டவர் சளி பிரச்சனையினாலும் அவதியுற்றவருக்கு தேவையான சிகிச்சை அளித்தபோதும் இறந்து போனதால் இது குறித்து மருத்துவ விசாரணையும் நடைபெற்று வருகிறது. 

இதற்கு இடையில் திருச்சி மாநகராட்சியில் பணிபுரியும் பெண் ஒருவருக்கு கரோனோ தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று மாநகராட்சி பில் கலெக்டர் ஒருவரின் மனைவிக்கு கரோனோ தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளர். 

திருச்சி மாநகரில் ஒரே நாளில் 7 பேருக்கு கரோனோ தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது இன்னும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கரோனோவின் முதல் பலி என்பது பெரிய திருச்சி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments