புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கொரோனா உறுதி.!புதுக்கோட்டை மாவட்டத்தில் 48 வயது பெண், 16 வயது இளம்பெண் மற்றும் 5 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று நேற்று 31.05.2020 உறுதி செய்யப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து புதுக்கோட்டைத் திரும்பிய பிலாவிடுதியைச் சோ்ந்த 48 வயது பெண், சென்னையிலிருந்து புதுக்கோட்டை திரும்பிய மூக்கம்பட்டியைச் சோ்ந்த 16 வயது இளம்பெண் ஆகிய இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. 

இதையடுத்து, அவா்கள் இருவருக்கும் ராணியாா் மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வாா்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், லெணா விளக்கு பகுதியைச் சோ்ந்த 5 வயது பெண் குழந்தைக்கு பழைய அரசுத் தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள கரோனா சிறப்பு வாா்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று நிலவரப்படி, கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 30 ஆக உயா்ந்துள்ளது. தற்போது சிகிச்சையில் 14 போ் உள்ளனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments