மீமிசலுக்கு வந்த அரசு பேருந்து.! பொதுமக்கள் வியாபாரிகள் மகிழ்ச்சி.!!கொரோனா நோயால் போடப்பட்ட ஊரடங்கில் பொது போக்குவரத்தை மத்திய மாநில அரசுகள் தடுத்து வைத்து இருந்தன.


இந்நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால் மத்திய அரசு சில தளர்வுகளை ஏற்படுத்த மாநில அரசுகளுக்கு பரிந்துரைத்து உள்ளது.

இதன் அடிப்படையில் தமிழக அரசு 60% பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கியுள்ளது.

அதன் அடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடற்கரை நகரமான மற்றும் முக்கிய சந்திப்பு பகுதி மீமிசல் ஆகும்.

இந்த வழிதடத்தில் பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, தொண்டி மூன்று சாலை பிரிந்து செல்கிறது. 

இந்நிலையில் இன்று 01-06-2020 திங்கள்கிழமை காலை முதல் அறந்தாங்கி, பட்டுக்கோட்டைக்கு மீமிசல் வழியாக  அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. 

கடந்த 68 நாட்களாக பேருந்து இயங்காத நிலையில் இன்று 60 சதவீத பயணிகளுடன் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

பேருந்து இருக்கைகளில் ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்ல அனுமதிக்கபடுவர் என்றும், கூட்டமாக பேருந்தில் ஏற அனுமதியில்லை என நடத்துனரால் தெரிவிக்கப்பட்டதுடன், பயணிகள் கண்டிப்பாக வாய் மூக்கு கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் வாய் மூக்கு கவசம் இன்றி பேருந்துகளில் பயணிக்க அனுமதி மறுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பயணிகள் ஏறும் போதும் இறங்கும் போதும் பேருந்துகளில் வைக்கப்பட்ட சானிடைசர்களை உபயோகப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

முதல் நாள் என்பதால் போதிய பயணிகள் இன்றி காணப்பட்டது.

மீமிசலுக்கு பேருந்து வசதி கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments