மணமேல்குடி அருகே ரூ.32 லட்சத்தில் போடப்பட்ட தார் சாலை.! பெயர்ந்துவரும் அவலம்.! ஒப்பந்தகாரர் மற்றும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.!புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள தளிக்கோட்டை கிராமத்தில் ஊராட்சி சார்பில் ரூ 32 லட்சம் மதிப்பில் தார் சாலை போட்டப்பட்டது.

இந்த சாலை வழியாக சிங்கவனம்,பேட்டிவயல், ஒல்லனூர் ஜீவாநகர், உள்ளிட்ட 6 கிராமங்களில் உள்ள பொதுமக்கள் விவசாயிகள் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் அரசு மருத்துவமனை செல்வோர் என பலரும் 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர். 

பொதுமக்களின் பல்வேறு போராட்டத்திற்கு பிறகு அரசு கவனத்திற்கு கொண்டு சென்று தற்போது புதிதாக இந்த தார் சாலை போடப்பட்டுள்ளது. தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் பணி மிகவும் மோசமாக இருப்பதாகவும், போடப்பட்ட தார் சாலை வெறும் கையில் எடுத்தாலே பெயர்ந்து வருவதாகவும் மிகவும் மோசமான நிலையில் பெயரளவிற்கு மட்டுமே போடப்பட்டு வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தங்கள் பகுதிக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தாலும் தற்போது தார்சாலை வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்த போதிலும் மகிழ்ச்சி பாதியுடன் வேதனையாக மாறி உள்ளது என குற்றம் சாட்டுகின்றனர்.

பல லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை நிலையை கண்ட பொது மக்களை அதிர்ச்சி அடையசெய்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் தரமில்லாத சாலையை அமைத்தவர்கள் மீதும் சாலையை அமைக்கும்போது முறையாக கண்காணிக்காத அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்,இந்த சாலையை அமைத்த ஒப்பந்தகாரர் அடுத்த 5 ஆண்டுகள் சாலையை அவரது சொந்த செலவில் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments