புதுக்கோட்டையில் 8 கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு.! அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை.!



புதுக்கோட்டையில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாத 8 கடைகளுக்கு ‘சீல்’ வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


கொரோனா ஊரடங்கில் சில தளர்வுகளை அளித்து வணிக நிறுவனங்கள், கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டன. கடைகளில் வாடிக்கையாளர்கள், உரிமையாளர்கள், பணியாளர்கள் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும் என்பது உள்பட விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தி உள்ளது. 

ஆனால் புதுக்கோட்டையில் கடை வீதிகளில் உள்ள கடைகளில் பெரும்பாலானோர் அரசின் விதிமுறைகளை பின்பற்றிய நிலையில் சிலர் இதனை பொருட்படுத்தாமலே உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்றினால் தான் அதன் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். 

இத்தகைய சூழ்நிலையில் அதிகாரிகளும் அவ்வப்போது கடைவீதிகளில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கின்றனர்.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு புதுக்கோட்டையில் அதிகரித்து வருகிற நிலையில் கீழ ராஜ வீதி, தெற்கு ராஜ வீதி, மேல ராஜ வீதி உள்ளிட்ட கடைவீதிகளில் நேற்று வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி, தாசில்தார் முருகப்பன், டவுன் இன்ஸ்பெக்டர் பரவாசுதேவன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது மோட்டார் பம்புகள் விற்பனை செய்யும் கடை, செல்போன் கடை, இனிப்பக கடை உள்ளிட்ட கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றாதது, பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் முக கவசம் அணியாமல் கடையின் உள்ளே இருந்ததை கண்டனர்.

இதையடுத்து அரசின் விதிமுறைகளை பின்பற்றாத அந்த கடைகளின் ஷட்டர்களை இழுத்து மூடி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மேலும் கடையின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். நேற்று நடந்த ஆய்வில் மொத்தம் 8 கடைகள் ‘சீல்’ வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த நடவடிக்கை தொடரும் என்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments