புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 86 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். ஒருவர் மட்டுமே மரணம் அடைந்த நிலையில் 38 பேர் நோய் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 48 பேர் சிசிக்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த இன்று ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியம், வர்த்தக காய்கனி வியாபாரிகள் சங்கம், நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் உள்பட பல்வேறு வணிக சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கலெக்டர் உமா மகேஸ்வரி, “புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர் களால்தான், இங்கு தொற்று பரவி வருகிறது. . மாவட்டம் முழுவதும் 13 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வெளி மாவட்டங்களிலிருந்து வரும் நபர்கள் பரிசோதனைக்கு பின்பு மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர் என்றார்.
மேலும், மாவட்டத்தில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், மாவட்டத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதுவரை, 1,200 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. அதேபோல், 36 வெண்டிலேட்டர் கருவிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 8800 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும், தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவை செயல்பட வேண்டும் என வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.