`இது கொரோனா ஜிமிக்கி!' -புதுக்கோட்டை நகைக்கடை உரிமையாளரின் புதிய முயற்சி




பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்குத்தான் ஜிமிக்கி கம்மலை செஞ்சேன். விளம்பரத்திற்காக கொரோனா கம்மலைத் தயாரிக்கவில்லை' என்கிறார் நகைக்கடை உரிமையாளர்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஓவியர் சங்கத்தினர், வைரஸின் அமைப்பைப் போன்று சாலையில் பிரமாண்ட ஓவியங்களை வரைந்தனர். அந்த ஓவியங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

அதேபோல், புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியில் நகைக்கடை மற்றும் நகைப்பட்டறை வைத்திருக்கும் வீரமணி என்பவர், தங்கத்தில் கொரோனா மாடல் ஜிமிக்கி கம்மலைத் தயார் செய்து காட்சிப்படுத்தியுள்ளார். இவர் தயாரித்த கொரோனா ஜிமிக்கி கம்மலுக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுபற்றி வீரமணி கூறும்போது, " நான் நகைக் கொல்லர் என்பதால், முதலில் கொரோனாவின் அமைப்பை தொலைக்காட்சியில் பார்த்ததுமே எனக்கு ஜிமிக்கி கம்மல் செய்யலாம்னு தோணுச்சு. கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த கொரோனா பாடல், கொரோனா ஓவியம், கொரோனா தங்க முகக்கவசம்னு பலரும் செய்யிறாங்க.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments