மீமிசலில் முழு சுய ஊரடங்கு.! வெறிச்சோடிய கடைவீதி..!



இந்தியா மற்றும் தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் 144 ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்தியா மற்றும் தமிழகத்தில் தற்போது 5-ஆம் கட்ட 144 ஊரடங்கு அமலில் உள்ளது.

மேலும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகள் மற்றும் தளர்வுகளை பிறப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் இன்று 25.06.2020 வியாழக்கிழமை கொரோனா நோய் தொற்றை தடுக்கும் விதமாக மீமிசல் வர்த்தக சங்கம் சார்பில் இன்று ஒருநாள் கடைகள் அனைத்தும் அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீமிசல் வியாபாரிகளின் முழு ஆதரவுடன்  காய்கறி, இறைச்சி கடைகள் மற்றும் மளிகை கடைகள் உட்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. பால் கடை, வங்கிகள், ஏடிஎம் மையங்கள் மற்றும்  மெடிக்கல் போன்ற அத்தியாவசிய கடைகள் மட்டும் திறந்திருந்தன.

கடைத்தெரு வெறிச்சோடி காணப்பட்டது. கணேசன் ஆஸ்பத்திரி மூடியுள்ளது. அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் லாரி போன்ற வாகனங்கள் இயங்கின.

மீமிசல் கடைவீதியில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

தமிழக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பின் படி மீமிசலில் இருந்து மாவட்ட எல்லைகளுக்குள் பேருந்துகள் இயக்கப்படுகிறது.




கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments