ஆவுடையார்கோவில் அருகே விமான விபத்தா.? மாவட்ட ஆட்சியர் விளக்கம்.!



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அருகில் உள்ள பேயாடிக்கோட்டை ஊராட்சி மேல வசந்தனூர் கிராமத்தில் உள்ள கன்மாயில் விமானம் விழுந்து எரிவதாக தகவல்கள் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.


ஆனால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இப்படி ஒரு விபத்து இல்லை என்று கூறப்பட்டு வருகிறது.

இது குறித்து நாம் அங்கு சென்று பார்வையிட்ட பிறகு அந்த கிராமத்தினரிடம் விசாரித்து போது, சம்பவ இடத்தில் இருந்து நம்மிடம் பேசிய கிராம இளைஞர்கள் பயங்கர அதிர்வோடு சத்தம் கேட்டது. அப்போது வீட்டைவிட்டு வெளியே வந்து பார்த்த போது ராணுவ விமானம் போல  ஒரு விமானம் பறந்து போனது. அதன் பிறகு மேலவசந்தனூர் கண்மாய் பக்கமாக புகை வந்தது. போய் பார்த்தால் கன்மாயில் இருந்த சீமைக்கருவேல மரங்கள், புல் எரிந்தது. 

அங்கு விமானமோ, விமானத்தின் பாகங்களோ இல்லை. அந்தப்பகுதியில் ஆடு, மாடு மேய்த்தவர்களும் விமானம் வந்து போன போது அதிக சத்தம் வந்தது. அப்போது ஏதோ பொருள் விழுந்தது போல இருந்தது. அதன் பிறகு கன்மாய்யில் கருவேல மரங்கள் எரிந்து புகை வந்தது என்றும் சொல்கிறார்கள் என்றனர்.


இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்து வருகின்றனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில் விமான விபத்து நடைபெற்றதா சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. இந்த செய்தியானது முற்றிலும் தவறான செய்தி. இது போன்ற தவறான செய்திகளை பரப்புவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்தார். மேலும் ஆவுடையார்கோவில் வட்டாட்சியரும், அறந்தாங்கி கோட்டாட்சியரும் தற்பொழுது அங்கு புல தணிக்கை செய்து வருகிறார்கள். அந்த கன்மாயில் இருந்த சீமைக்கருவேல மரங்கள், புல் போன்றவை எரிந்து வருகிறது. மேலும் அங்கு எந்த விமானத்துக்கான பாகங்களோ, விமானமோ அங்கு விபத்துக்குள்ளான தடயங்களோ கண்டெடுக்க படவில்லை என்பதை இவ்வாறாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.


அதிகாரி ஒருவர் கூறுகையில் சூப்பர்சோனிக் விமானம் வந்து சென்றுள்ளது. ஆனால் விபத்து இல்லை. ஆனால் வேறு எங்கோ நடந்த விமான விபத்து படங்களை போட்டு தகவல்கள் பரப்பப்படுகிறது. விமான விபத்து என்பது வதந்தி என்றனர்.


பலரும் மேலே உள்ள புகைப்படத்தை பரப்பி வருகின்றனர். இந்த புகைப்படம் அமெரிக்கவின் லாஸ் ஏஞ்சல் நகரில் கடந்த 28.01.2020 அன்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தின் புகைபடம் ஆகும்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments