வதந்திகளை நம்பாதீர்...! மக்கள் சேவையில் மனிதம் போற்றும் மருத்துவர் கணேசன் அவர்களை வாழ்த்துவோம்.!!மருத்துவர் கணேசன் அவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ததில் யாருக்கும் தொற்று இல்லை என மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது.


நகரத்தில் உள்ள பெரிய பெரிய மருத்துவர்கள் எல்லாம் இந்த காலகட்டத்தில் உயிருக்கு அஞ்சி எந்த நோயாளியையும் அனுமதிக்காது மருத்துவமனையை மூடி சென்றுள்ள நிலையில் தன் உடல் நலத்தையும் பொருட்படுத்தாது மக்களின் நலனுக்காக நம் பகுதியிலுள்ள மக்களின் நலனுக்காக தொடர்ந்து சேவையாற்றிய நல் உள்ளம் கொண்டவர் தான் டாக்டர் கணேசன் அவர்கள்.

கொரோனா தடை காலத்தில் நம் பகுதியை சுற்றியுள்ள வறுமையில் உள்ள ஏறக்குறைய 350 குடும்பங்களுக்கு ரெட் கிராஸ்ஸின் மூலமாக உணவு பொருட்களை வழங்கி உதவியவர் மருத்துவர் கணேசன் அவர்கள், 

தரமான மருத்துவத்தை ஏழைகளுக்காக நம் பகுதியில் வழங்கிக் கொண்டு இருக்கக் கூடியவர், மக்களுக்காக உழைக்கும் அவரைப்பற்றி தவறான செய்தியை பொறுப்பில் உள்ள சில பொறுப்பற்றவர்கள் பரப்பி காயப்படுத்தி உள்ளனர். 

பொய்யாதநல்லூரில் இருந்து ஒரு நோயாளி இரண்டு தினங்களுக்கு முன்பாக டாக்டர் கணேசன் அவர்களின் மருத்துவமனைக்கு வந்து சென்றதாக அறியப்பட்டு பின்பு அவருக்கு நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. 

அதனடிப்படையில் மருத்துவர் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர்களுக்கு யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று முடிவுகள் வெளிவந்துள்ளது. 

இந்நிலையில் மருத்துவருக்கு கொரோனா வந்து விட்டதாகவும் அவருடைய மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டதாகவும் சிலர் தவறான செய்தியை பரப்பி அவரை காயப்படுத்தியுள்ளனர். வாழைப்பழம் வழங்கி வள்ளலாக விளம்பரம் செய்யும் நல்லோர்களே!

டாக்டர் நம்ம ஊரிலே அவர் வீட்டிலே நலமாக உள்ளார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்படவும் இல்லை இதை கூட அறிந்து கொள்ளாத சில அறிவாளிகள் இதுபோன்ற தவறான செய்தியை பரப்புவதை தயவுகூர்ந்து நிறுத்திக்கொள்ளுங்கள்.

பொது சேவையில் இருக்கக்கூடிய மருத்துவ ஊழியர்கள் காவல்துறை நண்பர்கள் போன்றோரின் உழைப்பையும் சேவையும் எந்த ஒரு நொடியிலும் வீணாக்கி விடாதீர்கள் மக்கள் சேவை செய்யக் கூடியவர்களை போற்றுவோம்.

அன்புடன்...
அறம். மு.தங்கராஜ்,
மீமிசல்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments