கோபாலப்பட்டிணம் GPM மக்கள் மேடை சார்பில் இன்று 26.06.2020 வீடு வீடாக சென்று ஹோமியோபதி மருந்து வினியோகம் தொடக்க நிகழ்ச்சி.! அனைவரும் கலந்துகொள்ள அழைப்பு.!மத்திய மாநில அரசு அறிவுறுதலின்படி கோபாலப்பட்டிணம் GPM மக்கள் மேடை கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பாக இன்று 26.06.2020 சரியாக பிற்பகல் 1.30  மணியளவில் GPM மக்கள் மேடை அலுவலகத்திலிருந்து வீடு வீடாக சென்று கொரோனா நோய் தடுப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய ஹோமியோபதி மருந்தான 'ஆர்செனிக்கம் ஆல்பம் 30C' வழங்கப்பட உள்ளது.


அதுசமயம் ஊரில் உள்ள பெரியோர்கள், இளைஞர்கள் மற்றும் மக்கள் மேடை உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்நிகழ்வானது இன்று 26.06.2020 முதல் 28.06.2020 வரை கோபாலப்பட்டிணம் முழுவதும் உள்ள வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

எனவே GPM மக்கள் மேடை உறுப்பினர்கள் உங்கள் வீடு தேடி வரும்பொழுது நீங்கள் வீட்டில் இல்லையென்றால் GPM மக்கள் மேடை அலுவலகத்தில் வாங்கி கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
ஆலோசனை குழு 5,
GPM மக்கள் மேடை, 
கோபாலப்பட்டிணம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments