அறந்தாங்கியில் மஜக சார்பில் நடைபெற்ற வெளிநாடு வாழ் தமிழக தொழிலாளர்களை அழைத்துவர கோரி போராட்டம்!!அறந்தாங்கியில் மஜக சார்பில் வெளிநாடு வாழ் தமிழக தொழிலாளர்களை அழைத்துவர கோரி போராட்டம் நடைபெற்றது.


வெளிநாடு வாழ் தமிழர்களை அரசு செலவில் அழைத்து வரக் கோரி தமிழகத்தின் பல்வேறு அமைப்புகளின் ஆதரவோடு மனிதநேய ஜனநாயக கட்சி ஜூன் 05 மற்றும் 06 தேதிகளை தொடர்ந்து இறுதி கட்டமாக நேற்று ஜூன் 07 ஞாயிறு அன்று காலை 11 மணியளவில் மணிவிளான் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில் தலைமையில் மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி கோரிக்கை முழக்கங்களை முன்மொழிந்தார்.  மாவட்ட துணைச் செயலாளர் அஜ்மீர் அலி முன்னிலை வகித்தார்.


கலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் அப்துல் ஹமீது, மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் நாகூர் கனி, மாவட்ட தொழில்நுட்ப அணிச் செயலாளர் ஹாலித், ஒன்றிய செயலாளர் நோக்கியா சாகுல், ஒன்றிய துணைச் செயலாளர் நாகூர் கனி, நகர பொருளாளர் அப்துல் கரீம், நகர துணைச் செயலாளர் அப்துல் அமீது, உள்ளீட்டோர் மக்களுக்கு இடையூறு இல்லாமல் முக கவசம் அணிந்து   சமூக இடைவெளியுடன்  கலந்துக்கொண்டனர். முன்னதாக நகர செயலாளர் ஜகுபர் சாதிக் அனைவரையும் வரவேற்றார். இறுதியில் மாவட்ட துணைச் செயலாளர் ஒளி முகம்மது அனைவருக்கும் நன்றி கூறினார். தகவல்: மஜக - புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments