தமிழகத்தில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2026-27-ஆம் கல்விய ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்தி ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். நேரடியாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்கு உதவ, அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் 'சேர்க்கை உதவி மையங்கள்' (Admission Facilitation Centre - AFC) அமைக்கப்பட்டுள்ளன.
முக்கியத் தேதிகள்
விண்ணப்பப் பதிவு தொடக்கம்: 07.05.2026
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.05.2026
கட்டண விபரங்கள்
பொதுப் பிரிவு: விண்ணப்பக் கட்டணம் ₹.48 மற்றும் பதிவுக்கட்டணம் ₹2 என மொத்தம் ₹.50 செலுத்த வேண்டும்.
SC/ST பிரிவு: இவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. பதிவுக்கட்டணம் ₹.2 மட்டும் செலுத்தினால் போதுமானது.
இடங்கள் விபரம்
தமிழகம் முழுவதும் உள்ள 181 அரசு கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் மொத்தம் 1,26,959 இடங்கள் உள்ளன. இதில் முதல் சுழற்சியில் (Shift I) 1,01,022 இடங்களும், இரண்டாம் சுழற்சியில் (Shift II) 25,937 இடங்களும் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ள மாணவ-மாணவியர் உரிய காலத்திற்குள் விண்ணப்பித்து, தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.