ராமேஸ்வரம் பகுதியில் மீட்க வழியில்லாமல் தீ வைக்கப்பட்ட படகுகள்!



திடீரென ஏற்பட்ட சூறைக்காற்று மற்றும் கடல் கொந்தளிப்புக் காரணமாக 50- க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்த நிலையில், அதை மீட்க வழியில்லாததால் படகுகளுக்கு தீயிட்டு கொளுத்தினர் சம்மந்தப்பட்ட படகுகளின் உரிமையாளர்கள்.


அம்பன் புயலின் தாக்கத்தால் கடந்த மாதம் 18- ஆம் தேதியன்று ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவுப்பகுதிகளான ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம் மற்றும் சூசையப்பர் பட்டினம் பகுதிகளில் இரவு 11.00 மணியளவில் பலத்த சூறைக்காற்று வீச, கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.

இதனால் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப்படகுகளும், விசைப்படகுகளும் ஒன்றோடொன்று மோத 50- க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்து கடலில் மூழ்கின. இதனைச் சரி செய்து தர அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர் அப்பகுதி மீனவர்கள்.


ஆனால். அரசிடமிருந்து எவ்வித நிவாரணமும் வராத நிலையில், மீன்பிடித் தடைக்காலம் முடிந்து, கடலுக்குச் செல்ல அரசு அனுமதி அளித்திருந்த நிலையில் படகுகள் அனைத்தும் சரி செய்து புதிய படகு போல் தயார் செய்து கடலுக்குச் செல்ல இயலாத நிலை மீனவர்களுக்கு ஏற்பட்டது. 

இதனால், பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்களது சேதமடைந்த விசைப்படகு மற்றும் நாட்டுப் படகுகளை உடைத்து தீ வைத்தனர். "உரிய நிவாரணத் தொகை வழங்கப்படிருந்தால் இந்நிலை தங்களுக்கு ஏற்பட்டிருக்காதே" எனக் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர் அப்பகுதி மீனவர்கள்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments