அறந்தாங்கியில் திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசுரம் விநியோகம்.!



அறந்தாங்கியில் திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசுரம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.


திசைகள் அமைப்பின் பொருளாளர் முகமது முபாரக் தலைமையில் ஆசிரியர் பாஸ்கரன் மற்றும் முனைவர் முபாரக் அலி ஆகியோர் முன்னிலையில் திசைகள் ஒருங்கிணைப்பாளர் பெரியய்யா அவர்கள் விழிப்புணர்வு பிரசுர விநியோகத்தை பொதுமக்களுக்கு கொடுத்து  துவங்கிவைத்தார்.


இந்நிகழ்ச்சியில் திசைகள் அமைப்பின் நிர்வாகிகள் அப்துல் கரீம், மாடசாமி, தாஜ்தீன், வீரப்பன், அண்ணாதுரை, அப்துல் ரஹிம் ஆகியோர் சமூக இடைவெளியுடனும், முக கவசங்களுடனும் கலந்துக்கொண்டனர். கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு, எப்படி பரவுகிறது, நோய் அறிகுறிகள் என்ன, யார்யார் அதிகம் பாதிக்கப்படுவார்கள். கொரோனா வைரஸிடமிருந்து தடுத்துக்கொள்ளும் வழிமுறைகள் என்ன உள்ளீட்ட விபரங்கள் அடங்கிய பிரசுரத்தை வீடுவீடாக  பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments