கோபாலப்பட்டிணம் TNTJ கிளை நடத்திய இணையவழி போராட்டம்.! (படங்கள்,வீடியோ)கோபாலப்பட்டிணம் TNTJ கிளை சார்பாக இணையவழி போராட்டம் நடைபெற்றது.

வெளிநாடுகளில் இருக்கும் தமிழக மக்களை விரைந்து அழைத்து வரக்கோரி தமிழகம் தழுவிய இணைய வழி போராட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்திருந்தது.

வெளிநாடுகளில் இருக்கும் தமிழக மக்களை தாயகம் அழைத்து வருவதில் மத்திய அரசு அலட்சியம் காட்டி வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் வெளிநாடுகளில் தங்கி படிக்கும் மாணவர்கள், சுற்றுலா பயணிகள், மருத்துவத்திற்காக சென்ற நோயாளிகள், தொழிலாளர்கள் என பல்லாயிரக்கணக்கான தமிழக மக்கள் பல மாதங்களாக தமிழகம் வரமுடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர்.

கம்பெனிகள் மூடப்பட்டதால் தொழிலாளர்களாக பலர் சாலைகளில் படுத்து உறங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

இவர்களை பத்திரமாக தமிழகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். தமிழகம் வருவதற்கான அனைத்து செலவுகளையும் மத்திய, மாநில அரசுகள் ஏற்க வேண்டும். என்கிற கோரிக்கையை முன்வைத்து மாநிலம் தழுவிய இணைய வழி ஆர்ப்பாட்டம் இன்று 15.6.2020 திங்கள்கிழமை காலை 10.30 மணி முதல் 10.45 வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் கிளையில் தனிமனித இடைவெளி கடைபிடித்து இணையவழி போராட்டம் நடைபெற்றது.
 #TNTJOnlineProtest #BringBackTNExpats  

இப்படிக்கு...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
கோபாலப்பட்டிணம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments