புதுக்கோட்டை மாவட்டத்தில் இ-சேவை மையம் மூலம் பொதுமக்கள் வருவாய் தீர்வாயத்திற்கான (ஜமாபந்தி) தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.! கலெக்டர் தகவல்.!இ-சேவை மையம் மூலம் பொதுமக்கள் வருவாய் தீர்வாயத்திற்கான தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி தகவல் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்ததாவது:-புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும், கிராம நிர்வாக அலுவலர்களால் பராமரிக்கப்பட்டுவரும் வருவாய் கிராமக்கணக்குகளை ஒவ்வொரு வருடமும் அந்தந்த பசலி வருடத்தின் இறுதி மாதத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர், மற்றும் துணை ஆட்சியர்களால் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.

நடப்பு பசலி வருடத்திற்கு 1429 புதுக்கோட்டை மாவட்டத்தில் 22.06.2020 முதல் 29.06.2020 வரை 1429-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் ஊரடங்கு உத்தரவு 30.06.2020 நள்ளிரவு 12.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஆன்லைன் அல்லது இ-சேவை மையம் மூலம் 29.06.2020 ஆம் தேதி முதல் 15.07.2020 தேதி வரை பொதுமக்கள் வருவாய் தீர்வாயத்திற்கான தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, 29.06.2020 ஆம் தேதி முதல் 15.07.2020 தேதி வரை ஆன்லைன் மூலம் URL https://gdp.tn.gov.in/jamabandhi என்ற இணையதள முகவரியிலும் அல்லது இ-சேவை மையம் மூலம் பொதுமக்கள் வருவாய் தீர்வாயத்திற்கான தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments