சாத்தான்குளம் டிஎஸ்பியாக ராமநாதன் நியமனம்.! புதுக்கோட்டை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கு பிரதாபன் மாற்றம் - டிஜிபி திரிபாதி உத்தரவு.!சாத்தான்குளம் டிஎஸ்பி மற்றும் கள்ளக்குறிச்சி டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.


சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரணம் அடைந்த வழக்கு, பல்வேறு திருப்பங்களை கொடுத்து வருகிறது. இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த வழக்கில் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் பாரதிதாசன் தாக்கல் செய்த அறிக்கை பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது குறித்து டிஜிபி திரிபாதி பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: கள்ளக்குறிச்சி டி.எஸ்.பியாக உள்ள ராமநாதன் சாத்தான்குளம் டிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த சாத்தான்குளம் டி.எஸ்.பி பிரதாபன், புதுக்கோட்டை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

மேலும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஏடிஎஸ்பி குமார் நீலகிரி மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் எஸ்.பி.,யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments