தமிழகத்தில் சிறந்த ஊராட்சியாக நம்ம மாவட்டத்தின் "அம்புகோவில் ஊராட்சி" தேர்வு.!மத்திய அரசின் தீனதயாள் உபாத்யாய கிராம விருது நாடு முழுவதும் உள்ள சிறந்த ஊராட்சி நிர்வாகத்திற்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 


சுகாதாரம், கல்வி, கட்டமைப்பு, கிராம மேலாண்மை, குடிநீர், மருத்துவம், சாலை வசதி உள்ளிட்டவற்றின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களிலும் சிறந்த ஊராட்சி தேர்வு செய்யப்படுகிறது. இதன்படி தமிழகத்தில் சிறந்த ஊராட்சியாக கறம்பக்குடி ஒன்றியம் அம்புக்கோவில் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

சோழ பேரரசின் ஆளுகைக்கு உட்பட்ட அம்புநாட்டின் தலைமை இடமாக திகழ்ந்த அம்புக்கோவில் ஊராட்சி, தற்போது தேசிய அளவிலான விருதை பெற்றிருப்பது அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையடுத்து அந்த பகுதி மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினார்கள். மேலும் இந்த விருது கிடைத்ததால் அம்புக்கோவில் ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் மத்திய அரசின் நிதியாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்ட அம்புகோவில் ஊராட்சிக்கு மத்திய அரசின் சான்றிதழும், நிதிக்கான காசோலையும் வழங்கப்பட்டது. 

சிறந்த ஊராட்சியாக அம்புக்கோவில் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments