வந்தேபாரத் திட்டத்தில் முறைகேடு – ஏர் இந்தியா மீது அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டு.!



கரோனா வைரஸ் லாக்டவுன் உள்ளிட்ட தடைகளால் வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை நாட்டுக்கு அழைத்து வரும் பொறுப்பில் ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.


இந்நிலையில் இருநாடுகளுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து உடன்படிக்கையை மீறி சில பாகுபாடான, நியாயமற்ற செயல்களில் ஈடுபடுவதாக ஏர் இந்தியா சிறப்பு விமானங்கள் அமெரிக்கா செல்ல சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அமெரிக்கா.

அதாவது பொதுமக்களுக்கு டிக்கெட் கட்டணங்களையும் ஏர் இந்தியா வசூலிப்பதாக அமெரிக்க போக்குவரத்துத் துறை குற்றம்சாட்டியுள்ளது. அதே வேளையில் அமெரிக்க விமானங்களுக்கு இந்தியா கரோனா கால தடை விதித்துள்லது. இதனால் அமெரிக்க விமானங்களுக்கு போட்டி ரீதியாக சாதகமற்ற சூழ்நிலை நிலவுகிறது என்று அமெரிக்க போக்குவரத்துத் துறை குற்றம்சாட்டியுள்ளது.

மேலும் சிறப்பு விமானங்கள் இந்தியர்களை இந்தியாவுக்கு அழைத்துச் செல்லும் திட்டத்தையும் தாண்டி வணிக ரீதியாகச் செயல்படுகிறது. இந்தியர்களை அழைத்துச் செல்லும் பேரில் ஏர் இந்தியா பல்வேறு வணிக ரீதியான போக்குவரத்துச் செயல்களிலும் ஈடுபடுகிறது. பல விதங்களில் அமெரிக்காவின் விமானச் சேவை கட்டுப்பாடுகளை மீறி வருகிறது.

இதனையடுத்து சிறப்பு விமானங்களை இயக்குவதற்கு முன் இந்தியா இனி போக்குவரத்துத் துறையிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும். எனவே அதன் செயல்பாடுகளை தீவிரமாகக் கண்காணித்து அனுமதிக்க முடியும்.

அமெரிக்க விமானங்கள் மீதான இந்தியக் கட்டுப்பாடுகள் அகற்றப்பட்ட பிறகு இந்திய விமானம் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது பற்றி பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு அமெரிக்கப் போக்குவரத்துத் துறை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments