பிளஸ்-2 முடித்தவரா நீங்கள்.? ஊக்கத்தொகை பெற உடனே வங்கிக் கணக்கை பதிவு செய்யுங்கள்.! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.!



பிளஸ்–2 முடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வங்கிக் கணக்கை பதிவு செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


பள்ளிக்கல்வித்துறை சார்பில் இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் பிளஸ்–2 வகுப்பை படித்து முடிக்கும் மாணவர்களுக்கு கடந்த 2011–12ம் கல்வியாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நடப்பாண்டில் பிளஸ்–2 வகுப்பை முடித்த மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதற்கு மாணவர்களின் வங்கிக்கணக்கை சமர்ப்பிக்க கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து இருந்தது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு பிளஸ்–2 முடித்த 5 லட்சத்து 35 ஆயிரத்து 82 பேருக்கு ரூ.107 கோடி பள்ளிக்கல்வி துறையால் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகள் பெற்று, பள்ளிக்கல்வித் துறையின் கல்வியியல் மேலாண்மை தகவல் மையத்தில் (இ.எம்.ஐ.எஸ்.) பதிவு செய்ய உத்தரவிட்டு இருந்த நிலையில், இதுவரை 1 லட்சத்து 69 ஆயிரத்து 108 மாணவர்களின் விவரங்கள் மட்டுமே அதில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், விரைந்து மற்ற மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை பதிவு செய்யவும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments