அரசின் அலட்சியத்தால் பறிபோகும் உயிர்கள்.!வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்து சென்னை விஐடி கல்லூரியில் தனிமைப்படுத்த பட்டு மருத்துவ சிகிச்சை இல்லாமல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முஹம்மது ஷரிப் அவர்களின் மரணத்தை தொடர்ந்து அவரோடு மலேசியாவிலிருந்து பயணம் செய்த மற்ற பயணிகள் மன உளைச்சலில் இருக்கிறார்கள்.


உடனடியாக அவர்களை அவரவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் இரண்டு நாட்களாக கோரிக்கையை இஸ்லாமிய இயக்கங்கள் வைத்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில் அதிகாரிகளின் அலட்சியத்தின் காரணமாக மன உளைச்சலில் இருந்த மௌலானா ஹுசைன் பாகவி நேற்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை அவர் மரணம் அடைந்தார்.

மௌலானா ஹூஸைன் பாக்கவியின் மரணத்திற்கு காரணமான தாசில்தார் செந்தில், ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் உடனடியாக அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் இஸ்லாமிய இயக்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments