மிருகத்தனமான செயல்.., சிகிச்சை கட்டணம் செலுத்தாததால், முதியவரை கட்டிப்போட்ட மருத்துவமனை நிர்வாகம்.!மத்தியப் பிரதேசத்தில் சிகிச்சை கட்டணம் செலுத்தத் தவறியதற்காக 80 வயது முதியவர் ஒருவரை மருத்துவமனை நிர்வாகம் படுக்கையில் கட்டிப்போட்டுள்ளது.


இப்புகைப்படம் வெளியாகி சர்ச்சையாகியுள்ளது.மத்திய பிரதேசம் மாநிலம் ஷாஜாபூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதியவர் ஒருவர் உடல் நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கும் போது அவரது மகள் ரூ.5 ஆயிரத்தை முன் பணமாக செலுத்தியுள்ளார். சிகிச்சை சில நாட்கள் நீடித்ததால் அவரது சிகிச்சை கட்டணம் ரூ.11 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

தந்தையின் சிகிச்சை கட்டணத்தை செலுத்தும் அளவிற்கு தன்னிடம் பணம் இல்லை என அவர் மகள் கூறியுள்ளார். பணம் செலுத்தாமல் முதியவரை அழைத்து சென்றுவிடக் கூடாது என்பதற்காக மருத்துவமனை படுக்கையோடு சேர்த்து அவரை கட்டி வைத்துள்ளனர். இதனை சிலர் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிடவே இவ்விஷயம் சர்ச்சையானது.


இது குறித்து மருத்துவமனை தரப்பில், எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வு காரணமாக அவருக்கு மனநிலை மாற்றம் ஏற்பட்டதால், தன்னை தானே காயப்படுத்திக்கொள்ளாமல் இருக்க கட்டப்பட்டிந்ததாகவும், மனிதாபிமான அடிப்படையில் அவரின் சிகிச்சை கட்டணத்தை தள்ளுபடி செய்துவிட்டதாகவும் கூறியுள்ளது. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் இவ்விஷயத்தை கவனத்தில் கொண்டு, மருத்துவமனைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments